Friday, January 16, 2009

புத்தாண்டும், நண்பரின் பத்தாண்டு கொள்கையும்!

கடந்த பத்தாண்டுகளாக நண்பர்கள் யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் இருந்து, அதே கொள்கையில் தீவிரமாக இருக்கும் நண்பர் சுதாகர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

குறைந்த பட்சம் அவர்களின் அழைப்பை துண்டிக்காமல் பேசியதற்காக அவருக்கு நன்றிகள்.

இந்த புத்தாண்டிலும் உங்களது தீர்மானத்தில் உறுதியாக இருந்து பல ஆண்டுகள் இந்த கொள்கையை கடைபிடிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி!

Wednesday, January 14, 2009

8 pack ஒரு வியாதியாம்லே? நல்லா கெலப்புராங்கடா பீதியே?

இந்த சினிமா நடிகர்கள் விவரம் தெரியவில்லையென்றால் வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டார்களோ?
இன்றைக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தனுஷ் சொல்கிறார் "8 pack" என்று எதுவுமே கிடையாது. "6 pack" தான் சரி, அதற்கு மேல் இருந்தால் அது வியாதி என்று.

அந்த எலும்புக்கூட்டு உடம்பை தேற்ற முடியவில்லை என்றால் மற்றவர்களுக்கும் வராது என்பதா?

அமீர் கானின் கஜினி பட புகைபடங்களை பார்த்து "8 pack" என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளட்டும்.
http://in.movies.yahoo.com/specials/How-Aamir-Khan-got-eight-pack/Bollywood/slideshow-40.html

இதே மாதிரி முன்னொரு நாள் ஒரு பேட்டியில் உளறினார், யாத்ரா என்ற அவரது மகன் பெயருக்கு அர்த்தம் புனித பயணமாம். யாத்ரா என்றால் பயணம் என்று தான் பொருள். இதில் புனிதம், பாவம் எங்கிருந்து சேர்ந்தது?!?