பசுமையான மரங்களும்,சலசலக்கும் நீரோடைகளும், நீண்ட, நெடிய ஆறுகளும் எங்கே?
இந்த தேநீர்க்கடைகழகத்தை எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்திய அன்பு நண்பர் ஜோவுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நண்பர்களுக்கு ஒரு அவசர செய்தி, ஒரு நிமிடம் அமைதியாக நாம் வசிக்கும் இவ்வுலகத்தை பற்றி சிந்திப்போம். பசுமையான மரங்களும்,சலசலக்கும் நீரோடைகளும், நீண்ட நெடிய ஆறுகளும் எங்கே? மாறி மாறி வீடுகளையும் அடுக்கு மாடி கட்டிடங்களையும் கட்டி இயற்கை சமநிலைக்கு மாறாக கான்க்ரீட் காடுகளை உருவாக்குகிறோம். ஒவ்வொரு கோடையும் அனலின் கொதிப்பு அதிகரித்து கொண்டேபோகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டை சுற்றியும் மரமும் செடியும்கொண்ட ஒரு சிறிய தோட்டமாவது நாம் வளர்க்க வேண்டாமா? நான் குடியிருக்கும் வீட்டை சுற்றி, வீட்டின் சொந்தக்காரர் சிமெண்டைப்போட்டு புல்பூண்டு கூட முளைக்க முடியாதபடிக்கு நிரவிவிட்டார். சொந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் நண்பர்கள் தயவுசெய்து சுற்றிலும் ஒரு தோட்டம் அமைக்க மறவாதீர்கள். இன்று முதல் ஒரு சிறிய தாவரத்திற்கும் தீங்கிளைக்ககூடாது என்று பிரதிக்கினை எடுப்போம்.
6 Comments:
கான்கிரிட் காடுகள்! சரியாய் சொன்னாய் நண்பா!
உலக வெப்பமயமாகுதலைக் குறைக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
வீட்டை சுற்றி தோட்டமா? அந்தளவுக்கு நிலம் வாங்க யாரிடம் பணம் இருக்கிறது?
வணக்கம்.. இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்... நன்றாக உள்ளது மீண்டும் வருவேன்...
நகரத்து வாழ்வு - அது நரக வாழ்வு.
கல்மரங்கள் முளைத்த காடுகள்னு அன்றே எழுதி வைத்தார் நம்ம கவிப்பேரரசு.
அதை பிரதிபலிக்கிறீர்கள்.
ஞானசேகரன், தமிழ் நெஞ்சம்,
வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.
Chennai city yode thalai eluthai ini matha mudiyathu....Not only Chennai all the city
Thanks Christy.
We all need to work together to reduce global warming, our politicians on the other hand will not move a stone.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home