Thursday, March 04, 2010

நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் பலர்!



நித்யானந்தா & ரஞ்சிதா மீது விமர்சனக் கணைகளை வீசி வருகிறார்கள் பதிவர்களும், பத்திரிக்கையுலகமும். நாம் மட்டுமே உலக உத்தமர்கள் போல், இவர்கள் மீது தீர்ப்பு வழங்குவதற்கு நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?


நானொன்றும் விவிலியத்தைக் கரைத்துக் குடித்த ஆன்மீகவாதி இல்லையெனினும், விபச்சாரம் செய்த குற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்ணிற்கு என்ன தண்டனை கொடுப்பது என்று யூதர்கள் அழைத்து வந்த போது, இயேசு கிறிஸ்து கூறிய வசனமொன்று நினைவுக்கு வருகிறது "உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் கல் எறியட்டும்".


Sting விபச்சாரி ஒருத்தியின் வாழ்க்கையில் ஓரிரவைப் பற்றி எழுதி, பாடிய Tomorrow We'll See என்ற பாடலின் வரிகள் சரியாக பொருந்தி வருகின்றன.


Don't judge me

You could be me in another life

In another set of circumstances

Don't judge me

One more night I'll just have to take my chances

And tomorrow we'll see

Labels: , , ,

5 Comments:

At 6:03 PM , Blogger சசிகுமார் said...

நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 
At 6:29 PM , Blogger எட்வின் said...

நல்லவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை என்ற தாவீதின் சங்கீதம் தான் நினைவிற்கு வருகிறது.

நிச்சயமாக எவரையும் தீர்க்கும் உரிமை நமக்கு இல்லை.

 
At 10:40 PM , Blogger வினோத் கெளதம் said...

கிட்டத்தட்ட அதேத்தான் தப்பு செயாதவர்கள் யாரோ அவர்களே கல்யேறிய தகுதியானவர்கள்..

 
At 1:20 PM , Blogger Joe said...

நன்றி சதீஷ்.
புகழ் வளரனுமா? நீங்க என்ன அரசியல் கட்சி தொண்டர் மாதிரி பேசிக்கிட்டு? அதெல்லாம் எதுவும் நடக்காது, நடக்கவும் வேண்டாம்!

நன்றி வினோத்.

நன்றி எட்வின்.

 
At 3:07 AM , Blogger நேசமித்ரன் said...

:)

ஜோ இந்த மேட்டர் பேஸ் பண்ணி ஒரு கவிதையும் எழுதினேன்

சேம் தாட்

:)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home