Sunday, February 22, 2009

மீண்டும் ஒரு ஜப்பான் பயணம்!

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை நண்பர் ஜெயக்குமாரின் திருமணத்துக்காக திண்டுக்கல் சென்று விட்டு திங்களன்று அசதியாக உறங்கிக்கொண்டிருக்கும்போது, ஜப்பானில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது 7.45 மணியளவில். இந்த வாரத்துக்குள் ஜப்பானுக்கு வர முடியுமா என்றார் எதிர்முனையில் இருந்தவர். இல்லை என்று சொன்னால் விடவா போகிறீர்கள்? என்று கேட்க நினைத்தேன், "முடியும்..." என்று இழுத்ததுமே அவரே சிரித்து விட்டார்.

அங்கே ஒரு ப்ராஜெக்ட் முடிவடையும் நிலையில் இறுதிகட்ட நடவடிக்கைகளில் உதவி செய்யுமாறு கோரினார். செவ்வாய் கிழமை எல்லாம் உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமை டிக்கெட் ரிசர்வேசன் செய்ய முயற்சி செய்தால், உயர் அதிகாரியின் சம்மதம் கிட்டவே 2 நாள் ஆகி விட்டது. பிறகு வியாழன் இரவு தான் அதற்கான மெயில்-ஐ மீண்டும் அனுப்பி, வெள்ளி காலை சம்மதம் வாங்கி, அட்வான்ஸ் சம்பளம், டிக்கெட் எல்லாவற்றையும் வாங்கி சில பல துணிமணிகளை அள்ளி (புதிய கோட் சூட் Rs.8500, மற்ற துணிகள் சேர்த்து Rs. 15000க்கு மேல் ஆகி விட்டது)

ஒரு வழியாக சனிக்கிழமை இரவு 11 மணிக்கு கோலாலம்பூர் வழியாக டோக்கியோ செல்லும் விமானத்தில் ஏறியாகிவிட்டது. இங்கே 6 மணி நேரம் ட்ரான்சிட் டார்ச்சர்!

இன்று இரவு 9 மணிக்கு டோக்கியோ சென்றடைவேன்.

பிறகு பேசுவோம்!


1 Comments:

At 11:33 AM , Blogger Tech Shankar said...

Enjoy the world with full of happiness.

ulagam sutrum vaaliban - vaalga vaalga.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home